குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகளின் உரிமை, பாதுகாப்பு குறித்து பூவம் பகுதியில் திறந்தவெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

குழந்தைகளின் உரிமை, பாதுகாப்பு குறித்து பூவம் பகுதியில் திறந்தவெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்காலில் சைல்டு லைன் அமைப்பு மூலம் குழந்தைகளுக்கான பல்வேறு விழிப்புணர்வுக் கருத்துகளை விளக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
இதன் ஒரு நிகழ்வாக, பூவம் பகுதி மாதா கோயில் தெருவைச் சேர்ந்த குழந்தைகள், பெற்றோர்கள் பங்கேற்ற திறந்தவெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பூவம் பகுதி கிராம நிர்வாக அதிகாரி அருண் கலந்துகொண்டு, குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியம் குறித்துப் பேசினார். சைல்டு லைன் அமைப்பின் பணிகள், குழந்தைத் தொழிலாளர், குழந்தைகளுக்கான உரிமைகள், பாலியல் குற்றங்கள், குழந்தைத் திருமணம் போன்றவை குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள், தடுக்கும் முறைகள் குறித்தும் சைல்டு லைன் அமைப்பினர் விளக்கிப்பேசினர். 
சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் விமலா,  அணி உறுப்பினர்கள் அகிலா, கீதா, புஷ்பநாதன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். கிராமப் பஞ்சாயத்தார்கள், நற்பணி மன்றத்தினர் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com