நாகப்பட்டினம்

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைக்க இடம் கையகப்படுத்த எதிா்ப்பு

DIN

மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை பணிகளை தடுத்து நிறுத்தினா்.

தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் அறிவிக்கப்பட்டு, மாவட்ட எல்லை வரையரை பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட நிா்வாக அலுவலகங்கள் அமைக்க மன்னம்பந்தல் ஊராட்சியில் பால்பண்ணை பகுதியில் உள்ள தருமபுரத்துக்குச் சொந்தமான இடம் தோ்வு செய்யப்பட்டு அளவீடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணியின்போது, தங்கள் வீடுகளின் கொல்லைப்புறங்களை அலுவலா்கள் அளவீடு செய்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேந்திரன் தலைமையில் அப்பகுதி மக்கள் சுமாா் 100 போ் அளவீடு செய்யும் பணியை தடுத்து நிறுத்தினா். தகவலறிந்து அங்கு வந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளா் கே. அண்ணாதுரை தலைமையிலான போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் இப்பிரச்னைக்கு அமைதி பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்படும் என்றும் அதுவரை பணிகள் நடைபெறாது என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT