நாகப்பட்டினம்

லாரி மோதி சிறுவன் பலி

11th Aug 2019 01:50 AM

ADVERTISEMENT


திருமருகல் அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்ற சிறுவன் உயிரிழந்தார்.
நாகை மாவட்டம், திட்டச்சேரியை அடுத்த அனந்தநல்லூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம் (47). இவரது மகன் மகேஷ் (13). இவர்கள் இருவரும் சனிக்கிழமை நாகூர்- சன்னாநல்லூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். திருமருகல் அடுத்த கேதாரிமங்கலம் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற சரக்கு லாரியை முருகானந்தம் முந்திச்செல்ல முயன்றாராம். அப்போது, இருசக்கர வாகனம் லாரியில் சிக்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் அமர்ந்து சென்ற மகேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். முருகானந்தம் காயமடைந்தார். திட்டச்சேரி போலீஸார், மகேஷின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த முருகானந்தம் திருவாரூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT