நாகப்பட்டினம்

மாணவர்களுக்கான மாநில கிரிக்கெட் போட்டி: 19 அணிகள் பங்கேற்பு

11th Aug 2019 01:51 AM

ADVERTISEMENT


மயிலாடுதுறையில் சனிக்கிழமை தொடங்கிய மாநில அளவிலான மாணவர் கிரிக்கெட் போட்டியில் 19 அணிகள் பங்கேற்றுள்ளன.
மயிலாடுதுறை, சித்தர்காடு எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் தனியார் பள்ளியில், மாவட்ட கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் கழகம் சார்பில், மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான சப் ஜூனியர் கிரிக்கெட் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கி, 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு, நாகை மாவட்ட டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு கழகத் தலைவர் ஜெகவீரபாண்டியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு கழக செயலாளர் எஸ். ராம்ராஜ், நாகை மாவட்ட டென்னிஸ் கிரிக்கெட் விளையாட்டு கழக துணைத் தலைவர் ஆர்.வி. குருகோவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைவர் ஏ. தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். போட்டிகளை, மயிலாடுதுறை வட்டாட்சியர் என்.பி. இந்துமதி தொடங்கிவைத்தார்.
இதில், 14 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் தனித்தனியே நடைபெறுகின்றன. இப்போட்டிகளில், நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், நீலகிரி, கன்னியாகுமரி, மதுரை, விழுப்புரம், கோயமுத்தூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, நாமக்கல், திருவள்ளுர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆடவர் போட்டியில் 14 அணிகளும், மகளிர் போட்டியில் 5 அணிகளும் என மொத்தம் 19 அணிகள் பங்கேற்றுள்ளன. 
8 ஓவர்கள் கொண்ட இப்போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது. இதில், முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள், நவம்பர் மாதம் மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட உள்ளன.  
மயிலாடுதுறையில் நடைபெறும் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு டென்னிஸ் கிரிக்கெட் விளையாட்டு கழக திருச்சி மண்டல இயக்குநர்எஸ். ரவிச்சந்திரன் ஏற்பாடு
செய்திருந்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT