நாகப்பட்டினம்

பொது மருத்துவ முகாம்

11th Aug 2019 01:52 AM

ADVERTISEMENT

சீர்காழி அருகே உள்ள அல்லிவிளாகம் கிராமத்தில் பொதுசுகாதார மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அல்லிவிளாகம் அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் திட்டத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு சீர்காழி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார். மருத்துவ அலுவலர் சுஜிதா வரவேற்றார்.
முகாமில் கர்ப்பிணிகளுக்குப் பரிசோதனை, பல் மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவ அலுவலர்கள் பிரபாகரன், கனிமொழி, சம்பத்குமார், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சுகாதார ஆய்வாளர் அமிர்தலிங்கம் நன்றி கூறினார். இந்த முகாமில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மருத்துவப் பரிசோனை செய்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT