மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் கோடை கால ஆராய்ச்சி குறித்த கருத்தரங்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் நடைபெற்றது.
இக்கல்லூரியின் விலங்கியல் மற்றும் வனஉயிரியியல் துறையின், வனஉயிரியல் அறிவியல் மன்றம் சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு முதல்வர் ஆர். நாகராஜன் தலைமை வகித்தார். விலங்கியல் துறை ஒருங்கிணைப்பாளர் ஜி. சர்மிளா முன்னிலை வகித்தார். இரண்டாம் ஆண்டு வன உயிரியியல் துறை மாணவர்கள் ஏற்கெனவே அஸ்ஸாம், கேரளம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களில் கோடை கால ஆராய்ச்சிகளை நேரடியாக மேற்கொண்டனர். அங்கு பயின்ற அனுபவங்களை இக்கருத்தரங்கில் எடுத்துரைத்தனர்.
மேலும், பல வகைப்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கை முறைகளையும், அவைகள் எதிர்நோக்கும் இடர்பாடுகளையும், அவைகளை பாதுகாக்கும் வழிமுறைகளையும் விளக்கிக் கூறினர். இதில் திரளான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வன உயிரியல் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெயக்குமார் செய்திருந்தார். மாணவி சோபியா நன்றிகூறினார்.