நாகப்பட்டினம்

கடல் சீற்றம்: 8-ஆவது நாளாக மீன்பிடித் தொழில் பாதிப்பு

11th Aug 2019 01:54 AM

ADVERTISEMENT


வேதாரண்யம் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வீசிவரும் பலத்த கடற்காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடித் தொழில் தொடர்ந்து, எட்டாவது நாளாக சனிக்கிழமையும் பாதிக்கப்பட்டது.
வேதாரண்யம் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தெற்கு திசையில் இருந்து வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று வீசிவருகிறது. இதனிடையே வங்கக் கடலில் ஏற்பட்ட தாழ்வுநிலை மற்றும் பலத்த காற்றின் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், வேதாரண்யம் பகுதியில் மீன்பிடித் தொழில் தொடர்ந்து பாதித்து வருகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை பகலில் காற்றின் வேகம் சற்று குறைவாக உணரப்பட்டது. அத்துடன், அவ்வப்போது மந்தமான வானிலை நிலவியது. வேதாரண்யம், கோடியக்கரை கடல் தொடர்ந்து சீற்றமாக காணப்பட்டது. இதனால், மீனவர்கள் 8-ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT