நாகப்பட்டினம்

இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு

11th Aug 2019 01:50 AM

ADVERTISEMENT


வேதாரண்யத்தை அடுத்த தென்னடார், பஞ்சநதிக்குளம் பள்ளிகளில் நடைபெற்ற கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பஞ்சநதிக்குளம் மேற்கு நக்கீரனார் நடுநிலைப் பள்ளி, தென்னடார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பணி ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வை. முத்து நினைவு நாளையொட்டி இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வட்டாரத் தலைவர் தங்க. குழந்தைவேலு தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கத் தலைவர் கோ. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற தென்னடார் ஒன்றிய நடுநிலைப்  பள்ளி, பஞ்சநதிக்குளம் மேற்கு நக்கீரனார் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், தலைமையாசிரியர் திருமாவளவன், ஆசிரியர்கள் வே. சத்தியசிவம், ராஜேஸ்வரி, வை. எழிலரசன், அ.ம. குணசேகரன், சத்தியராஜ், தருமலிங்கம், ஜெய. கந்தசாமி, சமூக ஆர்வலர் ந. செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT