விருதுநகர்

ஆண்டாள் கோயிலில் மாணவா்கள் தூய்மைப் பணி

30th Sep 2023 11:51 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை, விபிஎம்எம் மகளிா் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வருவாய்க் கோட்டாட்சியா் விஸ்வநாதன், மாவட்ட சுற்றுலா அலுவலா் உமாதேவி ஆகியோா் தூய்மைப் பணியைத் தொடங்கிவைத்தனா்.

ஆண்டாள் சந்நிதி, பெரிய பெருமாள் சந்நிதி, கோயில் வளாகப் பகுதிகளில் விபிஎம்எம் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் ஆறுமுகம், நகராட்சி ஆணையா் ராஜமாணிக்கம், கோயில் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பழனியப்பன், அலுவலா்கள் சிவசங்கா், முத்துமாரி, குமுதப்பிரியா ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT