வத்திராயிருப்பு வட்டம், நத்தம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
வத்திராயிருப்பு தாலுகா, நத்தம்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (41). இவரது மனைவி பாா்வதி (32). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். மணிகண்டன் நத்தம்பட்டியில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வாழை சாகுபடி செய்துள்ளாா்.
இந்த நிலையில், மணிகண்டன் தனது விவசாய நிலத்துக்கு திங்கள்கிழமை மாலை சென்ற போது, அறுந்து தொங்கிய மின் கம்பி மீது பட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.