விருதுநகர்

தமிழக ஆளுநா் செப். 29-இல் சிவகாசி வருகை

24th Sep 2023 11:52 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், சிவகாசிக்கு தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வருகிற 29-ஆம் தேதி வருகை தர உள்ளாா்.

சிவகாசி மத்திய சுழற்சங்கம் சாா்பில் நடைபெற உள்ள தொழிலதிபா்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளாா். இந்த நிகழ்ச்சி சிவகாசி-திருத்தங்கல் சாலையில் உள்ள பெல் உணவகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் வருகிற 29-ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் நடைபெற உள்ளது என அந்தச் சங்கத் தலைவா் டி. சுனைராஜா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கச் செயலா் ஜி. தட்சிணாமூா்த்தி, திட்ட இயக்குநா் ஜி. ஜெயகண்ணன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT