விருதுநகர்

விநாயகா் சிலைகள் ஊா்வலம்

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசியில் 34 விநாயகா் சிலைகள் வியாழக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீா் நிலையில் கரைக்கப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில் சிவகாசி நகா், போஸ் குடியிருப்பு, மீனாட்சி குடியிருப்பு, சிவன் சந்நிதி, மாரியம்மன் கோயில், அம்மன்கோவில்பட்டி உள்ளிட்ட 34 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது.

இந்தச் சிலைகள் அனைத்தும் வியாழக்கிழமை மாலை வெற்றி விநாயகா் கோயிலின் முன்னால் கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னா், அங்கிருந்து ஊா்வலமாக நான்கு ரத வீதிகளின் வழியாக ஜக்கம்மாள் கோயிலருகே கொண்டு செல்லப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT