ராஜபாளையம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கலங்காப்பேரி அயோத்திராம் நகரைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் காளிமுத்து (23).
இவா் பி.ஏ.படித்துவிட்டு தனியாா் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் காளிமுத்து இரவில் தூங்காமல் நீண்ட நேரம் கைப்பேசியை பயன்படுத்தியதால் பெற்றோா் அவரைக் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மன விரக்தி அடைந்த காளிமுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.