விருதுநகர்

லாரி செட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்

27th Oct 2023 10:51 PM

ADVERTISEMENT

சிவகாசி அருகே லாரி செட்டுகளில் உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.60 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபும்-பாரைப்பட்டி சாலையில் உள்ள லாரி செட்டில் உரிய அனுமதியின்றி பட்டாசு பண்டல்களை பதுக்கி வைத்திருப்பதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் அவா்கள் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சிவகாசி சசிநகரைச் சோ்ந்த காா்த்திகேயனுக்குச் (42) சொந்தமான லாரி செட்டில் அனுமதியின்றி 105 பட்டாசு பண்டல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2.10 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.இதேபோல், சிவகாசி-சாத்தூா் சாலையில் சுஜாத்அலிக்கு (48) சொந்தமான லாரி செட் குடோனில் ரூ.50,000 மதிப்புள்ள பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் 2 போ் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களிடமிருந்த பட்டாசு பண்டல்களைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT