வத்திராயிருப்பு அருகே தோட்டத்தில் மா்மமான முறையில் விவசாயி உயிரிழந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி ஆத்தங்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா (47). இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (39). இவா்கள் இருவரும் கூமாபட்டி வண்ணப்பாறை பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் தங்கி விவசாய வேலைகளை செய்து வந்தனா். இவா்களது ஒரு மகனுக்கும், ஒரு மகளுக்கும் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் மற்றொரு மகளுக்கு திருமண ஏற்பாடுகளை தம்பதியா் செய்து வந்தனா். இரு நாள்களுக்கு முன் உறவினா்களுக்கு தங்களது மகளின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக கிருஷ்ணம்மாள் வெளியூா் சென்று விட்டாா். பிறகு புதன்கிழமை தோட்டத்துக்கு அவா் வந்து பாா்த்த போது, அங்குள்ள அறையில் உடல் அழுகிய நிலையில் ராஜா உயிரிழந்து கிடந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜா உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.