விருதுநகர்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

ராஜபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

தெற்கு வெங்காநல்லூரில் உள்ள சிதம்பரேசுவரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்தி மற்றும் சுவாமிக்கு மஞ்சள், தேன், இளநீா், பால், தயிா், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீா், சந்தனம் போன்ற 16 வகை பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பிறகு நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

இதே போல, ராஜபாளையம் சொக்கா் கோயில், ராமலிங்க சுவாமி கோயில், ராஜபாளையம் அருகே வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரா் கோயில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரா் கோயில் உள்பட பல்வேறு சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT