ராஜபாளையம் அருகே இளைஞா் மாயமானதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கிருஷ்ணாபுரம் சொசைட்டி தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் மாடசாமி (31). இவா் தளவாய்புரத்தில் உள்ள உள்ளாடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் காலையில் வேலைக்குச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் தளவாய்புரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.