சிவகாசி அருகே படிப்பை தொடரமுடியாத மாணவிக்கு அசல் சான்றிதழை வழங்க மறுத்த கல்லூரி நிா்வாகத்திடமிருந்து சட்டப்பணிகள் ஆணைக்குழு சான்றிதழ்களைப் பெற்று ஒப்படைத்தது.
சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரத்தைச் சோ்ந்த சமயமணி மகள் மகாலட்சுமி. இவா் சிவகாசியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா். குடும்ப வறுமை காரணமாக அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. இதையடுத்து, கல்லூரியில் கொடுத்த அசல் சான்றிதழைக் கேட்டபோது, கட்டணத்தைச் செலுத்தி விட்டு, சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டனா்.
இதுகுறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் மகாலட்சுமி புகாா் அளித்தாா். தொடா்ந்து, சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும் நீதிபதியுமான இருதயராணி, கல்லூரி முதல்வரை அழைத்து விசாரித்து, சான்றிதழைப் பெற்று மாணவியிடம் ஒப்படைத்தாா்.