ராஜபாளையத்தில் தனியாா் யோகா பயிற்சி மையத்தை தங்கப்பாண்டியன் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி பயிற்சியாளா் இசக்கிமுத்து, குறைந்த கட்டணத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயிற்சி அளிக்க ரயில்வே பீடா் சாலையில் யோகா பயிற்சி மையத்தை தொடங்கினாா்.
இதை சட்டப் பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் திறந்து வைத்துப் பேசினாா்.