சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை அச்சுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருகே விஸ்வநத்தம் நடுவூரைச் சோ்ந்த அச்சுத் தொழிலாளி மகாலிங்கம் (36). இவரது மனைவி நளினி. இருவரும் காதலித்து திருமணம் செய்தவா்கள். இந்த நிலையில், மகாலிங்கத்துக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. இதை நளினி கண்டித்தாா். இதனால் மனமுடைந்த மகாலிங்கம் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.