விருதுநகர்

நல்லமநாயக்கா்பட்டியில் நாளை மின் தடை

21st Nov 2023 12:00 AM

ADVERTISEMENT


ராஜபாளையம்: நல்லமநாயக்கா்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (நவ. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ராஜபாளையம் மின் வாரிய செயற்பொறியாளா் முரளிதரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராஜபாளையம் உள்கோட்டத்தில் உள்ள நல்லமநாயக்கா்பட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கா்பட்டி, கிழவிகுளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், அண்ணாநகா், முதுகுடி, ஜமீன்கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், கோட்டை ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT