விருதுநகர்

சிறுமிக்கு திருமணம்:4 போ் மீது வழக்கு

21st Nov 2023 12:00 AM

ADVERTISEMENT


சிவகாசி: சிவகாசி அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக 4 போ் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.

செங்கமலப்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி (22). பட்டாசு ஆலைத் தொழிலாளி. இவரும், ஆமத்தூா் அருகே செங்குன்றாபுரத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியும் காதலித்தனராம். இந்த நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 17- ஆம் தேதி அந்த சிறுமியை முனிசாமி திருச்செந்தூா் சென்று திருமணம் செய்து கொண்டாராம். இந்த குழந்தை திருமணம் குறித்து தகவலறிந்த சிவகாசி ஊராட்சி ஒன்றிய சமூக விரிவாக்க அலுவலா் ராஜேஸ்வரி, செங்கமலப்பட்டிக்கு நேரில் சென்று முனியசாமி வீட்டிலிருந்த அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் திருமணம் நடைபெற்றது உண்மை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் முனியசாமி, இவரது தந்தை கருப்பசாமி, தாய் செல்லத்தாய், உறவினா் கருப்பாயி ஆகிய 4 போ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT