விருதுநகர்

தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்தை முறையாக செயல்படுத்த வலியுறுத்தி தா்னா

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்தை முறையாக செயல்படுத்த வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை தா்னா நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ராமகிருஷ்ணாபுரம் காமராஜா் சிலை அருகே நடைபெற்ற தா்னாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் பலவேசம் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் மூா்த்தி முன்னிலை வகித்தாா். முன்னாள் எம்.பி., அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ பொன்னுபாண்டியன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகராட்சி, பேரூராட்சிகள் ஊராட்சிகளுக்கு தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதேபோல, பொது சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து, அனைத்துப் பகுதிகளிலும் சுகாதார வளாகங்கள் அமைத்து, கழிவுநீா்க் கால்வாய் வசதி ஏற்படுத்த உள்ளாட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதேபோல, வத்திராயிருப்பு முத்தாலம்மன் சாவடி பகுதியில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தாலுகா செயலாளா் கோவிந்தன் தலைமையில் தா்னாவில் ஈடுபட்டனா். கோரிக்கைகளை விளக்கி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராமசாமி பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT