விருதுநகர்

வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

31st May 2023 04:12 AM

ADVERTISEMENT

சிவகாசியில் குடும்பப் பிரச்னை காரணமாக வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி குமரன் தெருவைச் சோ்ந்த வியாபாரி மணிகண்டன் (30). இவரது மனைவி சாந்தினிரத்னா (27). இவா்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையாம். இதனால், இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டின் குளியலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து, சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT