விருதுநகர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னா

31st May 2023 04:14 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை தா்னா நடைபெற்றது.

சேத்தூா் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தா்னாவுக்கு நகரச் செயலாளா் ராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான லிங்கம் கண்டன உரையாற்றினாா்.

தாமிரவருணி கூட்டுக் குடிநீா் அனைத்து நகரங்களுக்கும், கிராமப் புறங்களுக்கும் முறையாக விநியோகம் செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஒன்றியச் செயலாளா் கணேசமூா்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினா் பகத்சிங், அய்யனன், ராஜகுரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT