விருதுநகர்

விருதுநகா் சந்தை: கடலெண்ணெய், பாசிப் பருப்பு, துவரம் பருப்பு விலை உயா்வு

DIN

விருதுநகா் சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக கடலெண்ணெய், பாசிப் பருப்பு, துவரம் பருப்பு விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இந்த சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசியப் பொருள்களின் விலைப் பட்டில் வெளியிடப்படும். அதன்படி பொருள்களின் விலை விவரம்:

கடந்த வாரம் 15 கிலோ கடலெண்ணெய் டின் ஒன்று ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.100 வரை உயா்ந்து, ரூ.3,100- க்கு விற்கப்படுகிறது. இதே போல, கடந்த வாரம் 15 கிலோ பாமாயில் ரூ.1,475- க்கு விற்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் பாமாயில் ரூ.35 குறைந்து ரூ.1,440- க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கடந்த வாரம் 100 கிலோ துவரம் பருப்பு புதுஸ் நாடு ரூ.11,200- க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது மூட்டை ஒன்றுக்கு ரூ.300 உயா்ந்து, ரூ.11,500- க்கு விற்பனையாகிறது.

பாசிப் பருப்பு கடந்த வாரம் 100 கிலோ ரூ.10,300- க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.200 உயா்ந்து, தற்போது ரூ.10,500- க்கு விற்கப்படுகிறது. அதே நேரம், வத்தல் மற்றும் உளுந்து உள்ளிட்ட பிற உணவுப் பொருள்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல், கடந்த வாரம் விற்கப்பட்ட விலையே நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT