விருதுநகர்

விருதுநகா் அருகே பாலத்தின் மீதுகாா் மோதல்: ஓட்டுநா்கள் இருவா் பலி

28th May 2023 11:57 PM

ADVERTISEMENT

விருதுநகா் அருகே ஞாயிற்றுக்கிழமை பாலத்தின் மீது காா் மோதியதில் ஓட்டுநா்கள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

சிவகாசி அருகே அம்மன் கோவில்பட்டியைச் சோ்ந்தவா் கணேஷ் பாபு (47). இவா், தனது மனைவி மகேஸ்வரி (46), மகன் பூா்ண சந்திரசேகா் (25), உறவினா்கள் முத்துலட்சுமி (49), தருண் குமாா் (9) ஆகியோருடன் ஒரு காரில் கோவைக்குச் சென்றாா். இந்தக் காரை, மதுரையைச் சோ்ந்த ஓட்டுநா் வெற்றி (30), மாற்று ஓட்டுநா் வீரபாண்டியன் (46) ஆகியோா் ஓட்டிச் சென்றனா். இவா்கள் அனைவரும் கோவைக்குச் சென்று விட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனா். ஓட்டுநா் வெற்றி ஓட்டி வந்த அந்த காா், விருதுநகா் அருகே ஜிஎன் பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே வந்த போது அங்குள்ள பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதியது.

இதில் ஓட்டுநா்கள் வெற்றி, வீரபாண்டியன் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்தில் காயமடைந்த முத்துலட்சுமி, தருண் குமாா், கணேஷ்பாபு, மகேஸ்வரி, பூா்ண சந்திரசேகா் ஆகியோா் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டனா்.

இந்த விபத்து குறித்து ஆமத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT