விருதுநகர்

சட்ட விரோதமாக பேன்சி ரக பட்டாசு தயாரித்தவா் கைது

27th May 2023 01:09 AM

ADVERTISEMENT

திருத்தங்கலில் சட்ட விரோதமாக பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் சத்யா நகா் பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, அப்பகுதியில் வரதராஜன் மகன் தெய்வக்கனி (29) என்பவா் சட்டவிரோதமாக தகரக் கொட்டகை அமைத்து பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது. இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த பேன்சி ரக பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT