விருதுநகர்

புதிய தமிழகம் கட்சி ஆா்ப்பாட்டம்

27th May 2023 11:39 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் ஜவகா் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மருத்துவா் ஷியாம் கிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழல்களைத் தடுக்கவும், அமைச்சா் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யவும், பூரண மது விலக்கு அமல்படுத்தக் கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் நெசவாளா் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவா் கணேசன், மாவட்ட இணைச் செயலா் திருப்பதி, மாநில அமைப்பு செயலா் ராமராஜ், ஒன்றியச் செயலா் குருவையா ஆகியோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT