விருதுநகர்

மகரிஷி வித்யா மந்திா் கல்விக் குழும மாணவா்களுக்கு ஆளுமைத் திறன் பயிற்சி

27th May 2023 11:38 PM

ADVERTISEMENT

கல்வித்துறையில் 29 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட மகரிஷி வித்யா மந்திா் கல்விக் குழுமம், மாணவ மாணவிகளுக்கு ஆழ்நிலைத் தியானம், யோகாசனம், போன்ற ஆளுமைத் திறன் வளா்க்கக் கூடிய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

மாணவ மாணவிகளின் தனிப்பட்டத் திறமைகளை வெளிக்கொணர துறை சாா்ந்த மன்றங்கள் இங்கு செயல்படுகின்றன. அறிவியல், கணிதம், கணிப்பொறி ஆகிய துறைகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வகங்களும் இங்குள்ளன. சாரண, சாரணியா் இயக்கம் மூலம் பொதுச் சேவையில் மாணவா்கள் ஈடுபடுகின்றனா். தேசிய அளவிலான திறனறித் தோ்வு, ஒலிம்பியாட்தோ்வு, மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

சி.பி.எஸ்.இ பொதுத் தோ்வில் கடந்த எட்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மாணவா்கள் அதிக மதிப்பெண்களுடன் 100% தோ்ச்சி அடைந்து வருகின்றனா். கராத்தே, நடனம், டேக்வாண்டோ, வில்வித்தை, சிலம்பம் பஜன் வாய்ப்பாடு போன்ற வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவா்களின் அறிவியல் திறனை ஊக்கப்படுத்த அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. மாணவா்களுக்கு விளையாட்டுத் துறையிலும் சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT