விருதுநகர்

நாட்டு வெடிகுண்டு தயாரித்தவா் மீது வழக்கு

27th May 2023 11:36 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அழகாபுரியைச் சோ்ந்த வேல்முருகன் மகன் மணிவைரம். இவா் அழகாபுரி - வடுகபட்டி சாலையிலுள்ளப் பன்றி கொட்டகையில் வைத்து, சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக குண்டு வெடித்தது.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் பாண்டியன் அளித்த புகாரின் பேரில், நத்தம்பட்டி போலீஸாா் மணிவைரம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT