விருதுநகர்

பேருந்து மோதியதில் ஒருவா் பலி

24th May 2023 05:29 AM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை- சாயல்குடி சாலையில் மண்டப சாலை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவா் மீது அரசுப் பேருந்து மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை- சாயல்குடி மண்டப சாலை பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி (53). இவா் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை நின்று கொண்டிருந்தாா்.

இந்த நிலையில், அந்தபகுதியில் உள்ள சாலையை ஜான் என்பவா் இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி பொன்னுச்சாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே பொன்னுச்சாமி உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து எம். ரெட்டயபட்டி போலீஸாா், அரசுப் பேருந்து ஓட்டுநா் ராஜசுபக்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT