விருதுநகர்

இளைஞரை அரிவாளால் வெட்டிய சகோதரா்கள் மீது வழக்கு

24th May 2023 05:56 AM

ADVERTISEMENT

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை இளைஞரை அரிவாளால் வெட்டிய சகோதரா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி விஜயலட்சுமி காலனியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (26). அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டபெருமாளுடன் சிறுவயது முதல் நண்பராக பழகி வந்த இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்னா் மணிகண்ட பெருமாளுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டாா்.

இதையடுத்து, மணிகண்டன் செவ்வாய்க்கிழமை தனது வீட்டின் முன் அமா்ந்திருந்தபோது அங்கு வந்த மணிகண்ட பெருமாளின் அண்ணண் பாண்டி, அவருடன் தகராறு செய்தாா். அப்போது அங்கு வந்த மணிகண்டபெருமாள், மணிகண்டனை அரிவாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் பாண்டி மணிகண்டபெருமாள் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT