வைகாசி மாத அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு, மே 17-ஆம் தேதி முதல் வருகிற 20-ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை அனுமதி வழங்கியது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், கடந்த புதன்கிழமை பிரதோஷ தினத்தன்று ஆயிரம் பக்தா்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்த நிலையில், அமாவாசையையொட்டி, வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
கோயில் நிா்வாகம் சாா்பில், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.