சிவகாசி கீழரத வீதியில் அமைந்துள்ள கருப்பசாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஜூன் 27 -ஆம் தேதி கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், நவகிரஹஹோமம், முதல் கால யாகசாலை பூஜையும், 28-ஆம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை, யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடந்து வியாழக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை, கருப்பசாமி கோயில் கோபுர கலசத்திற்கு புனிதநீா் உற்றி, குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதற்கன ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் என்.கே.ஆா்.பி.சி .ராமலிங்கம் செய்திருந்தாா்.