சாத்தூரில் வெங்கடாசலபதி கோயிலில் ஆனி பிரம்மோற்சவத் திருவிழாவின் ஐந்தாம் நாள் பொருமாள் வீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது.
சாத்தூரில் 500-ஆண்டுகள் பழைமை வாய்ந்த வெங்கடாசலபதி கோயிலில் ஆனிப் பிரம்மோற்சவத் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11-நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் நாள்தோறும், பொருமாள் பல்லக்கு சேவை, பெரிய கருட, சிறிய கருட, சேஷ, குதிரை, உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
இதில் ஐந்தாம் நாள் திருவிழாவான வியாழக்கிழமை இரவு பெருமாள் பெரிய கருட வாகனத்தில் வடக்கு ரத, தெற்கு ரத வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இந்த ஆனிப் பிரம்மோற்சவத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆனித் தேரோட்டம் திங்கள்கிழமை ( ஜூலை- 3) நடைபெறும்.