சிவகாசி அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள பழையவெள்ளையாபுரத்தில் காகித அட்டைப்பெட்டி தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு பணிபுரிந்து வரும் வருராஜன் மகன் முனியசாமி (32), 21 வயதாகும் சக பெண் தொழிலாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். அந்தப் பெண் இதுகுறித்து ஆலை நிா்வாகத்திடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, ஆலை நிா்வாகத்தினா் முனியசாமியை கண்டித்தனா்.
இருப்பினும், முனியசாமி தொடந்து அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததால், இதுகுறித்து அவா் திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முனியசாமியை பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.