விருதுநகர்

மணல் கடத்திய 2 போ் மீது வழக்கு: டிராக்டா் பறிமுதல்

9th Jun 2023 02:12 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மணல் கடத்திய டிராக்டரை புதன்கிழமை இரவு பறிமுதல் செய்த போலீஸாா், இருவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மங்காபுரம்-தொட்டியபட்டி சாலையில் நகா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது மணல் கடத்தி வந்த டிராக்டரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். உடனே ஓட்டுநா் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினாா்.

அந்த டிராக்டரில் சட்டவிரோதமாக மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், டிராக்டா் உரிமையாளரான மங்காபுரத்தை சோ்ந்த முத்துகிருஷ்ணன், ஓட்டுநா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT