விருதுநகர்

குடும்பத் தகராறு:தொழிலாளி தற்கொலை

9th Jun 2023 02:10 AM

ADVERTISEMENT

சாத்தூா் அருகே குடும்பத் தகராறில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள படந்தால் மேலத் தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி (55). இவரது மனைவி பா்வதம். தம்பதியரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, அவா்கள் இதே பகுதியில் தனித்தனி வீட்டில் பிரிந்து வாழ்ந்து வந்தனா்.

இதனால் மனமுடைந்த கருப்பசாமி, புதன்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாா். உடனே உறவினா்கள் கருப்பசாமியை மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், கருப்பசாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT