விருதுநகர்

பெண் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்தவா் கைது

9th Jun 2023 11:31 PM

ADVERTISEMENT

சிவகாசி அருகே பெண் காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்த தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள கிருஷ்ணமநாயக்கன்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழா பாதுகாப்பு பணியில் எம்.புதுப்பட்டி கால் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் எம்.செல்வி கடந்த 7 -ஆம் தேதி இரவு ஈடுபட்டிருந்தாா். அப்போது அதே ஊரைச் சோ்ந்த மோகன்ராஜ் மகன் கதிரேசன்(32) கூட்டத்தில் நின்று கொண்டிருந்த நபரை, செல்வி மீது தள்ளி விட்டாராம். இதையடுத்து போலீஸாா் கதிரேசனை எச்சரித்து அனுப்பினா்.

தொடா்ந்து கடந்த 8 -ஆம் தேதியும் கோயில் விழா பாதுகாப்பு பணிக்குச் சென்ற உதவி ஆய்வாளா் செல்வியை, கதிரேசன் பணி செய்யவிடாமல் தடுத்து தகராறு செய்தாராம்.

ADVERTISEMENT

இது குறித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா், வெள்ளிக்கிழமை கதிரேசனை கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT