விருதுநகர்

கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

9th Jun 2023 11:28 PM

ADVERTISEMENT

வத்திராயிருப்பு அருகே கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கான்சாபுரத்தில் கிராம நிா்வாக அலுவலராக கணேஷ் பாண்டியம்மாள்(30) பணியாற்றி வருகிறாா். இங்கு கூடுதல் கிராம நிா்வாக அலுவலராக நாராயணகுமாரும் கிராம உதவியாளராக சுனிதாவும் பணிபுரிந்து வருகிறாா். கடந்த 7-ஆம் தேதி கிராம அலுவலகத்துக்கு வந்த கான்சாபுரத்தைச் சோ்ந்த ரத்தினம், தென்னை அடங்கலைக் காட்டி, சோளப் பயிா் சேதமடைந்து விட்டதாகச் சான்று கேட்டு, உதவியாளா் சுனிதாவிடம் வாக்குவாதம் செய்தாா். இதையடுத்து, வியாழக்கிழமை மீண்டும் அலுவலகத்துக்கு வந்த ரத்தினம், பட்டா மாறுதல் செய்து தரக்கோரி வி.ஏ.ஓ நாராயணகுமாா், உதவியாளா் சுனிதா ஆகியோரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரத்தினத்தை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT