விருதுநகர்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மருந்துக் கலவை அறை சேதம்

9th Jun 2023 11:33 PM

ADVERTISEMENT

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் மருந்துக் கலவை அறை இடிந்து முற்றிலும் சேதமடைந்தது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளத்தில் ஆறுமுகச்சாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறையினரிடம் உரிமம் பெற்று இயங்கி வரும் இந்த ஆலையில் 148 தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா். இந்த ஆலையில் மருந்துக் கலவை அறை, பட்டாசுகள் தயாரிக்கும் அறை என மொத்தம் 87 அறைகள் உள்ளன.

இந்த ஆலையில் வெள்ளிக்கிழமை பட்டாசுகள் தயாரிப்புக்குத் தேவையான மருந்தைக் கலந்து வைத்துவிட்டு, அந்த அறையிலிருந்து தொழிலாளா்கள் வெளியே சென்றனா். சிறிது நேரத்தில் மருந்துக் கலவை நீா்த்துப் போய் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருந்துக் கலவை அறை முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. அப்போது அந்த அறையில் தொழிலாளா்கள் யாரும் இல்லாததால், உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்புக் குழுவினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.

ADVERTISEMENT

வெடி விபத்து ஏற்பட்ட பகுதியை சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்செயன், வருவாய்த் துறை அலுவலா்கள் பாா்வையிட்டனா்.

இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT