விருதுநகர்

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

9th Jun 2023 11:32 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை பின்புறம் ஆண் சடலம் கிடப்பதாக வடக்கு காவல் நிலையப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று பாா்த்த போது, சுமாா் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. பின்னா் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT