விருதுநகர்

கேட்பாரற்று நின்ற 3 இருசக்கர வாகனங்களைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை

9th Jun 2023 11:29 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கேட்பாரற்று நின்று கொண்டிருந்த மூன்று இரு சக்கர வாகனங்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வலையங்குளம் பகுதியில் கடந்த 3 நாள்களுக்கு மேலாக 3 இரு சக்கர வாகனங்கள் கேட்பாரற்று நிற்பதாக அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து, நத்தம்பட்டி போலீஸாா் அங்குச் சென்று பாா்த்த போது, முட்புதருக்குள் 3 இரு சக்கர வாகனங்கள் நின்றன.

இதையடுத்து, அவற்றைக் கைப்பற்றிய போலீஸாா், வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT