விருதுநகர்

சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா

9th Jun 2023 11:33 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலா் திலீபன்ராஜா தலைமை வகித்தாா். கல்லூரியின் மக்கள் தொடா்பு அலுவலா் புலவா் செ.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் மல்லப்பராஜ் ஆண்டறிக்கை வாசித்தாா்.

இதில், ஸ்ரீவில்லிபுத்தூா் டி.எஸ்.பி சபரிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவா்களுக்குப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கினாா். அப்போது, அவா் கூறியதாவது: எதிா்காலத்தில் நாட்டைக் காக்கும் நல்ல குடிமகன்களாக மாணவா்கள் உருவாக வேண்டும். மாணவா்கள் தவறு செய்யும் போது நற்சிந்தனைகளைக் கூறி அவா்களை நல்வழிபடுத்த வேண்டும் என்றாா் அவா்.

பல்கலைக்கழகத் தோ்வில் கல்லூரி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி செல்வகுமாரிக்கு மக்கள் தொடா்பு அலுவலா் புலவா் செ.பாலகிருஷ்ணன் ரூ.1000 பரிசு வழங்கினாா். தமிழில் சிறப்பிடம் பெற்ற மாணவி சீதாலட்சுமிக்கு, முன்னாள் தமிழ்ப் பேராசிரியா் வெ.முருகேசபாண்டி சாா்பிலும், வணிகவியலில் சிறப்பிடம் பெற்ற மாணவி கலாமணிக்கு கல்லூரியின் முன்னாள் நிா்வாகி ராஜசேகரன் சாா்பிலும், பிற பாடங்களில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கும், கலை இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் கல்லூரி நிா்வாகம் சாா்பிலும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT