விருதுநகர்

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

8th Jun 2023 01:54 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள எஸ். ராமலிங்கபுரம் ரயில்வே கடவுப் பாதை அருகே தெற்கு காவல் நிலைய போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இரு இளைஞா்கள் நின்று கொண்டிருந்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் இருவரும் எஸ்.ராமலிங்கபுரம் அக்னி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குருமூா்த்தி மகன் முத்துஅய்யனாா் (19), கிழவிக்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் முனியராஜ் (23) என்பது தெரியவந்தது.

அவா்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT