விருதுநகர்

சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதம்

7th Jun 2023 03:42 AM

ADVERTISEMENT

சிவகாசியில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டது. அதன்படி, பறக்கும் படை மேற்பாா்வையாளா் முத்துராஜ், மாநகராட்சி 2-ஆவது மண்டலம் பகுதியில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகளை திரியவிட்ட விக்னேஸ்வரன், சுரேஷ் ஆகிய இருவருக்கும் தலா ரூ.7,500 அபராதம் விதித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT