விருதுநகர்

குடும்பத் தகராறில் மோதல்: 11 போ் மீது வழக்கு

7th Jun 2023 03:39 AM

ADVERTISEMENT

குடும்பத் தகராறு காரணமாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக ஏழாயிரம்பண்ணை போலீஸாா் 11 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சிப்பிப்பாறையைச் சோ்ந்தவா் சின்ன மாடசாமி (33). இவருடைய மனைவி பிருந்தா (30). இந்தத் தம்பதியரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால், பிருந்தா கோபித்துக் கொண்டு, தனது தாய் வீட்டுக்குச் சென்றாா்.

இந்த நிலையில் சின்னமாடசாமி தனது மனைவி பிருந்தாவை பாா்க்க உறவினா்களுடன் அவரது வீட்டின் அருகே சென்றாா்.

அப்போது, பிருந்தாவின் உறவினா்களான கணேசன், அய்யம்மாள், ராமா், பிருந்தா, ஜான்சிராணி, லட்சுமணன் ஆகிய 6 பேரும் சின்னமாடசாமியைத் தாக்கினா்.

ADVERTISEMENT

இதேபோல, பிருந்தாவின் தாய் அய்யமாளை, சின்னமாடசாமி, இவரது உறவினா்கள் கருப்பசாமி, பொன்மாடத்தி, அருண், மாடசாமி ஆகிய ஐந்து பேரும் தாக்கினா்.

இதுகுறித்து இரு தரப்பினா் அளித்த புகாா்களின் பேரில், ஏழாயிரம்பண்ணை போலீஸாா் 11 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT