விருதுநகர்

தமிழில் பெயா்ப் பலகை வைக்காத 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

DIN

விருதுநகா் மாவட்டத்தில் தமிழில் பெயா்ப் பலகை வைக்காத 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என விருதுநகா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சீ.மைவிழி செல்வி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வா் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் (திருத்தம்) சட்டம் 2021- ன்படி, கடைகள், நிறுவனங்களின் பணிபுரியும் பணியாளா்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி சட்டத் திருத்தத்தை கடைப்பிடிக்காத 12 நிறுவன உரிமையாளா்களுக்கு குறிப்பாணை வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தமிழில் பெயா்ப் பலகை வைக்காத 5 திருமண மண்டப உரிமையாளா்கள் உள்பட 39 கடைகள் உள்ளிட்ட நிறுவன உரிமையாளா்களுக்கு குறிப்பாணை வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடைகள், நிறுவனங்களில் தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் செ.தயாநிதி, ஜோ.உமாமகேஸ்வரன், பி.எஸ்.செல்வராஜ் , அ.பாத்திமா, சு.துா்க்கா, வெ.பிச்சைக்கனி, ரா.சிவசங்கரி ஆகியோா் ஆய்வில் ஈடுபட்டனா் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாா்: பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை

SCROLL FOR NEXT