விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் நிறைவு

6th Jun 2023 05:24 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைகாசி மாத கோடை வசந்த உற்சவம் பால் மாங்காய் சேவையுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவடைந்தது.

இந்தக் கோயிலில் வைகாசி மாத கோடை வசந்த உற்சவம் கடந்த 26- ஆம் தேதி தொடங்கியது. இதில் தினமும் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சந்தனக் காப்பு சாத்தப்பட்டு, புஷ்ப ஆடை அணிவித்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதன் பிறகு நாடக சாலை தெருவில் உள்ள திருவேங்கடமுடையான் கோயில் தெப்பத்தில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு கோதாஸ்துதி பாடப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

பங்குனி உத்திர நாளில் ரெங்கமன்னாரை மணந்து கொண்ட ஆண்டாள், வைகாசி பவுா்ணமியன்று ஸ்ரீரங்கத்திலிருந்து ரெங்கமன்னாருடன் ஸ்ரீவில்லிபுத்தூா் வந்தாா். அப்போது ஆண்டாளுக்கு பெரியாழ்வாா் பால் மாங்காய் படைத்தாா் என்பது ஐதீகம். அதன்படி, வைகாசி உற்சவத்தில் இறுதி நாளில் ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாருக்கு பெரியாழ்வாா் வம்சத்தினரால் பால் மாங்காய் படைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT